5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் செய்துள்ள மாபெரும் வசூல்..
சினிமா
இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து துரந்தர் பார்ட் 2 திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர்.
மாபெரும் வசூல்
அதன்படி, கடந்த வாரம் வெளிவந்த துரந்தர் 2 திரைப்படம் கலவையான பெற்றாலும் முதல் நாளில் இருந்து வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 5 நாட்களில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் துரந்தர் 2 உலகளவில் ரூ. 850 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.






















