• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பைக்கர் திரைப்படம் சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் - இசையமைப்பாளர் ஜிப்ரான்

சினிமா

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் 2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்த கொண்ட இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும் போது, "இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும், ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.

இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி," என்றார்.
 

Leave a Reply