• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்ப் உருவப்படம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் வெளியிட முடிவு

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி டிரம்பின் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்காவின் நுண்கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நாணயத்தில் டிரம்ப், ஜனாதிபதி அலுவலக மேஜையில் கைகளை வைத்திருப்பது போன்ற படம் இடம்பெறும். நாணயத்தின் மறுபக்கத்தில் கழுகுச் சின்னம் மற்றும் 'அமெரிக்கா 250 இலச்சினை இருக்கும். அமெரிக்க வரலாற்றில் உயிருடன் இருக்கும் ஒரு ஜனாதிபதியின் உருவம் நாணயத்தில் இடம் பெறுவது இது 2-வது முறை மட்டுமே.

இதற்கு முன் 1926-ல் 150-வது சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் உருவம் நாணயத்தில் இடம்பெற்றது. மேலும் தலைநகர் வாஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற தேசிய அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் நாட்டின் 250-வது ஆண்டை கொண்டாடும் வகையில் அந்த நாட்டின் தேசிய பாலூட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள காட்டெருமைகளின் 2 வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
 

Leave a Reply