• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொலம்பியா ராணுவ விமானம் விபத்து - 66 சடலங்கள் மீட்பு

கொலம்பியா நாட்டின் புயர்டோ லெகுய்சாமோ நகரில் இருந்து நேற்று முன்தினம் 128 பேருடன் ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டது.

விமானத்தில் ராணுவத்தைச் சேர்ந்த 115 பேர், விமானப் பணியாளர்கள் 11 பேர், தேசிய காவல்துறையைச் சேர்ந்த 2 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்நிலையில், விமான விபத்தில் சிக்கி பலியான 66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவ வீரர்கள். 57 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த புயர்டோ லெகுய்சாமோ நகரம் ஈக்வடார் மற்றும் பெரு நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள அமேசான் மாகாணமான புடுமாயோவில் உள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 

Leave a Reply