• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் நான்காவது நடிகை..

சினிமா

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர்.

மேலும், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், படக்குழுவிடமிருந்து அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுஷ்கா ஷர்மாதான். இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கடந்த 2018ல் வெளிவந்த Zero படத்தில் கடைசியாக கதாநாயகியாக நடித்திருந்தார் நிலையில், அதன்பின் அவர் எந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. குறிப்பாக திருமணத்திற்கு பின் அவர் சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார்.

ஆனால், தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் இவர் அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply