ஈராக்கிலிருந்து பாதுகாப்பை விலக்கிய நேட்டோ
ஈராக்கிலிருந்து தனது பாதுகாப்பு ஆலோசனைக் குழுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாக நேட்டோ இராணுவக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தனது பணியாளர்கள் அனைவரையும் தெற்கு இத்தாலியில் உள்ள நேபிள்ஸில் இருக்கும் தனது வளாகங்களுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.
ஈராக்கிலிருந்து நேட்டோ படையினரை பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய உதவிய ஈராக் குடியரசுக்கும், அனைத்து நேச நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று அமெரிக்க ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் கூறினார்.
இந்தப் பணிக்குழு, ஈராக் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2018-ல் நிறுவப்பட்ட ஒரு போர் புரியாத படையாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் , பாக்தாத்தில் உள்ள வாஷிங்டன் தூதரகம் உட்பட, ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகளைத் தாக்கி வருகின்றன.ஈரான் கலாச்சார ஆய்வு இந்நிலையிலேயே படைகள் பின்வாக்கப்பட்டன.





















