22 நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல்..
சினிமா
தமிழ் சினிமாவின் கலை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தாய் கிழவி.
இப்படத்தை முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம் தயாரித்திருந்தார். அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள தாய் கிழவி படம், 22 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது. இந்த நிலையில், 22 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது.























