• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விஜய் சேதுபதியுடன் முதல்முறையாக இணையும் சாய் பல்லவி... 

சினிமா

பிரபல இயக்குநர் மணிரத்னம் ‘தக்லைஃப்’ படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக சாய் பல்லவி இணையும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 23' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். முன்னதாக இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இன்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஜூலை மாதம் முதல் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், படத்தின் கதைகளம், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதனால் வரும் நாட்களில் இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Leave a Reply