• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் நாள் துரந்தர் 2 படம் செய்துள்ள வசூல்.. 

சினிமா

பாலிவுட் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ரன்வீர் சிங் நடிப்பில் நேற்று வெளிவந்துள்ள படம் துரந்தர் 2.

கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்புடன் வெளிவந்த துரந்தர் 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதே போல் மறுப்பக்கம் கலவையான விமர்சனங்களையும் பலரும் முன்வைத்து வருகிறார்கள். ப்ரீ புக்கிங், பிரீமியர் வசூல் வேட்டை என தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது துரந்தர் 2.

இந்த நிலையில், முதல் நாள் துரந்தர் 2 படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் மட்டும் ரூ. 220 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து மாபெரும் சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.

Leave a Reply