• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புதிய, நல்ல முயற்சி. நல்ல தரமாக உள்ளது

சினிமா

நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன். மற்ற நடிகர்கள் எல்லாம் அவருக்குப் பிறகுதான். சின்ன வயதில் அவரது படங்கள் பார்க்கும்போது கதையில் அவரை யாராவது திட்டினாலோ, அடித்தாலோ, ஏமாற்றினாலோ, அவரது கேரக்ட்டருக்கு ஏதாவது துயர் என்றாலோ எனக்கு அழுகை வந்துவிடும்.
ராமன் எத்தனை ராமனடி, பாபு, எங்க மாமா, குலமா - குணமா, கிரஹப்பிரவேசம் போன்ற படங்களில் எல்லாம் நிறைய அழுதிருக்கிறேன்.
அதேபோல அவரது கேரக்ட்டருக்கு நல்லது நடந்தால் ரொம்ப சந்தோஷமாகிவிடுவேன்.
வளர்ந்த பிறகு அவரது நடிப்பை, அசைவுகளை, ஸ்டைலை அணுஅணுவாக ரசிப்பேன். இப்போதும் அடிக்கடி பழைய சிவாஜி படங்களைப் பார்ப்பேன். அவரை பிறர் பாராட்டிப் பேசுவதை கேட்கும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.
சிவாஜியை ரொம்பப் பிடிக்கும் என்பதால் எனக்கு பிரபுவை பிடிக்கும். அவரது குரலும், கம்பீரமும், நடிப்பும், நடனமும், கன்னக்குழி சிரிப்பும் எவருக்கும் பிடிக்கும்.

இரண்டு, மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ராம்குமாரையும் பிடிக்கும். அவர் முதன்முதலில் நடித்தார் என்பதற்காகவே அறுவடை நாள் படத்தைப் பார்க்கப்போனேன்.
இப்போது சிவாஜியின் பேரன் விக்ரம் நடிக்க வந்து வெற்றி அடைவதில் எனக்கு என் குடும்பத்தில் ஒருவர் ஜெயித்தது போல பெருமிதம்.
இத்தனையும் எழுதுகிறேன் இப்போது?
ராம்குமார் தனது யூட்யூப் சேனலை தொடங்கியிருக்கிறார். பாட்காஸ்ட் டைப். முதல் பேட்டி சத்யராஜ் உடன். ரொம்ப அருமையாக இருக்கிறது. மிகவும் குறிப்பாக ராம்குமாரின் பண்பான பாவங்களும், தோழமையான பேச்சும், நன்றாக தெரிந்தவரானாலும் சத்யராஜுடன் மரியாதையாக பேசுவதும். பேட்டி கொடுப்பவரை நிறைய பேசவிடுகிறார். சுவையான சம்பவங்களை கேட்டுப் பெறுகிறார்.
புதிய, நல்ல முயற்சி. நல்ல தரமாக உள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்திருப்பது பின்னூட்டங்களில் தெரிகிறது.
சேனல் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
5 மார்ச் 2026 அன்றுதான் சேனலை ஆரம்பித்திருக்கிறார். அதற்குள் 1.25 கோடி பார்வைகள்.

 

Sathyamurthy Ramanujam

Leave a Reply