• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவனம் ஈர்க்கும் யோகி பாபுவின் அர்ஜூனன் பேர் பத்து டீசர்

சினிமா

நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 300-ஆவது திரைப்படம் "அர்ஜூனன் பேர் பத்து." இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட் மற்றும் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பிரதீப் காலிராஜா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓம் பிரகாஷ் இந்தப் படத்திற்கு சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். இந்தப் படத்தை தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி மற்றும் தங்க பாண்டி தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் "அர்ஜூனன் பேர் பத்து" படத்தின் டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். டீசரின் படி ஒரே வண்டியை பலரிடம் ஏமாற்றி விற்ற நபர் பற்றிய இன்வெஸ்டிகேஷன் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கிறது. இந்தப் படம் கோடை விடுமுறையை ஒட்டி ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply