வசூல் வேட்டையாடி வரும் தாய் கிழவி..
சினிமா
கடந்த மாதம் வெளிவந்த தாய் கிழவி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, சிங்கம்புலி, பால சரவணன், அருள்தாஸ், முத்துக்குமார் என பலரும் நடித்திருந்தனர்.
எதிர்பார்ப்புடன் வெளிவந்த தாய் கிழவி படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. இதன் காரணமாக முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் 19 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் தாய் கிழவி திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 74.5 கோடி வசூல் செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 54.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






















