பிரித்தானியாவில் மூளைக்காய்ச்சலால் 18 வயது மாணவி உயிரிழப்பு
பிரித்தானிய நகரமொன்றில் பரவும் பயங்கர மெனிஞ்சைட்டிஸ் (meningitis) மூளைக்காய்ச்சலால் 18 வயது மாணவி ஜூலியட் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவி ஜூலியட் , Queen Elizabeth’s Grammar School பள்ளியில் கல்வி கற்று வந்தவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது மரணத்தைப் பற்றிய செய்தியை பள்ளி ஆசிரியர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
மெனிஞ்சைட்டிஸ் பரவியுள்ள இடமாக Club Chemistry இரவு விடுதி குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தின் போது சுமார் 2,000 பேர் அங்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அந்த இடத்தில் இருந்த மாணவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் உடனடியாக ஆண்டிபயாட்டிக் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபரின் விவரங்கள் இதுவரை வெளிப்படவில்லை. அதேசமயம் சமூக ஆரோக்கிய அதிகாரிகள் மற்றும் பள்ளிகள் மாணவர்களை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்






















