• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் பெண்ணொருவர் நிகழ்த்தப்போகும் கின்னஸ் உலக சாதனை.!!!

இலங்கை

இலங்கையில் கின்னஸ் (Guinness) உலக சாதனை ஒன்றை பெண் ஒருவர் நிகழ்த்தவுள்ளார். இச்சாதனையை யாழ்ப்பாணத்தில் பிறந்து கனடா நாட்டில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஷ்ணன் அவர்களே நிகழ்த்தவுள்ளார். 

பெண்களாலும் உலக சாதனைகளை படைக்கமுடியும் என்ற செய்தியை உலகிற்கே பறைசாற்றும் முகமாக இச் சாதனை இடம்பெறவுள்ளது.

தனது நீண்ட கால முயற்சியின் பலனாக கின்னஸ் (Guinness) உலக சாதனை ஒன்றை 

குமுதினி கோபாலகிருஷ்ணன் நிகழ்த்தவுள்ளார்.

இந்த கின்னஸ் உலக சாதனையானது, எதிர்வரும் 01.04.2026 அன்று மாலை 6.00க்கு A-09 வீதி திருமுறுகண்டியில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக கின்னஸ்(Guinness) உலக சாதனை ஒன்று இடம்பெறுவதை, நேரடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கைவாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது.

இந்த செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து குறித்த நாளில் உரிய நேரத்தில் குறித்த இடத்தில் அனைவரையும் ஒன்றிணையச் செய்யுங்கள்!
 

Leave a Reply