ஞானபீட விருது வென்ற வைரமுத்துவுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து
சினிமா
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பின் வைரமுத்துவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.























