• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி

இலங்கை

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni)  தெரிவித்துள்ளார்.

இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni)  இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர்  ( Giorgia Meloni)  அறிவித்துள்ளார்.

அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ( Giorgia Meloni)  அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply