• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெபனானின் சிடோன் நகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்

தெற்கு லெபனானின் சிடோன் நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனான் சுகாதார அமைச்சின் தகவல்களின்படி, இந்தத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர் என தேசிய செய்தி நிறுவனத்தை (NNA) மேற்கோள் காட்டி அல்ஜெஸீரா இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

லெபனானின் மூன்றாவது பெரிய நகரமான சிடோனின் கிழக்கு புறநகர்ப் பகுதியான 'அல்-புவார்' (al-Fouar) என்ற இடத்தில் உள்ள ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் இந்த வான் தாக்குதலால் குறித்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதோடு, மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply