எரிபொருள் விலை உயர்வில் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் - ட்ரம்ப் கருத்து
ஈரானின் அதி உயர் தலைவரின் உரை ஒளிபரப்பப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்கா இலாபம் ஈட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ட்ரூத் சமூக தளத்தில் அவர் தெரிவிக்கையில், அமெரிக்கா உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
எனவே எண்ணெய் விலை உயரும்போது, நாங்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.
ஆனால், ஜனாதிபதி என்ற வகையில் எனக்கு மிக முக்கியமானது, ஈரான் என்ற தீய பேரரசு அணு ஆயுதங்களை வைத்திருப்பதைத் தடுப்பதும், மத்திய கிழக்கு மற்றும் உலகை அழிப்பதைத் தடுப்பதும்தான்.
அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.






















