• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆறு ஆண்டுகளுக்குப் பின் சீனா - வடகொரியா தொடருந்து சேவை

கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பயணிகள் தொடருந்து சேவை இன்று (12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

சீனாவின் பீஜிங் மற்றும் வடகொரியாவின் பியன்ஜியங் (Pyongyang) ஆகிய நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு நான்கு தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டென்டாங் (Dandong) மற்றும் வடகொரிய தலைநகருக்கு இடையிலான தொடருந்து போக்குவரத்து தினசரி அடிப்படையில் இயங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவிட் அச்சுறுத்தல் காரணமாக 2020ஆம் ஆண்டு முதல் வடகொரியா தனது எல்லைகளைக் கடுமையாக மூடியிருந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply