TamilsGuide

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா

மலையகத்தில் பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து நிகழ்வுகளும் வெகுசிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது ரதி. மதன். சிவபெருமான்.இந்திரன் நாரதர் ஈஸ்வரி. சரஸ்வதி.வினாயகர். முருகன். வள்ளி.தெய்வானை ஆகிய வேடங்கள் தரித்து தேவர் சபையில் மதனுக்கும் ரதிக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டு மதனின் கரங்களால் ரதி தேவிக்கு தாலிகட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து சபைதூது. ஓலைதூது. வீர புத்திரன். வீரம்மாகளி. மோகினி. தேர்வசந்தம். ஏமன்.காளன். தூதன். எரிதுதன் ஆகிய வேடங்கள் காமன் திடலினை அலங்கரித்ததோடு இந்த காமன் விழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர் இதேவேளை குறித்த தோட்டத்தில் கடந்த 16ம் திகதி காமன் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
 

Leave a comment

Comment