TamilsGuide

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்து சேகரிப்பு

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு தேவையில்லை என்பதை வலியுறுத்தி மக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதன்போது அதிகளவான பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு தாபல் அட்டைகளில் தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
 

Leave a comment

Comment