• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன்- சினேகா

சினிமா

சென்னையில் நடந்த அவள் ஐகான் விருது வழங்கும் விழாவில் நடிகை சினேகாவிற்கு கரு. பழனியப்பன் விருது வழங்கினார். விழாவில் பேசிய சினேகா, சினிமாவிற்கு வந்த புதிதில் 3 வருடத்திலேயே மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். விபத்தில் கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டது. நான் எழுந்து நடப்பதற்கே 8 மாதத்திற்கு மேல் ஆகும் என்றனர்.

அந்த நேரத்தில் பார்த்திபன் கனவு கதையை கரு. பழனியப்பன் கூறினார். எந்த நம்பிக்கையில் என்னிடம் கதை சொல்கிறீர்கள் என கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்து விடுவீர்கள் என சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கையில் 1½ மாதத்தில் 'பார்த்திபன் கனவு' படப்பிடிப்பில் பங்கேற்றேன்.

அந்த படத்தில் எல்லோருக்கும் விருது கிடைத்தது. எனக்கு விருது கிடைக்கவில்லையே என மிகவும் வருத்தப்பட்டேன். அந்த படத்திற்கு மட்டுமல்ல. ஆட்டோகிராப், பள்ளிக்கூடம் பட்டாசு என எந்த படத்திற்கும் எனக்கு விருது கிடைக்கவில்லை. ஆனால் போகப்போக அதுவே பழகி விட்டது. விருதை விட மக்களின் மனதில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என்று பேசினார். 
 

Leave a Reply