• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை தாருங்கள் - ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த கலிபோர்னியா ஆளுநர்

சினிமா

அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சித்துள்ள கலிபோர்னியா ஆளுநர் கசின் நியூசம் (Gavin Newsom) , பொதுமக்களிடம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தை உடனடியாகத் திருப்பிச் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப்பினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளே அவரது வரி விதிப்பு சட்டவிரோதமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். இது அமெரிக்க குடும்பங்களுக்கும் சிறு வணிகங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

ட்ரம்ப் உடனடியாக வட்டியுடன் அந்தப் பணத்தை அமெரிக்கர்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும் என கலிபோர்னியா ஆளுநர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட சினேற்றர் எலிசபெத் வாரன் குறிப்பிடுகையில்,

"நீதிமன்றத் தீர்ப்பு மட்டும் ட்ரம்ப்பின் வரிகளால் ஏற்பட்ட பாரிய சேதத்தை ஈடுசெய்யப் போதாது. நுகர்வோருக்குச் சொந்தமான ஒவ்வொரு டொலரும் திருப்பி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், பணத்தைத் திருப்பிச் செலுத்தும் எண்ணம் தமக்கில்லை என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விவகாரம் பல வருடங்களுக்கு நீதிமன்ற வழக்குகளில் சிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதேவேளை ட்ரம்ப் நிர்வாகம் சட்டவிரோதமாக சுமார் 130 - 150 பில்லியன் டொலர் வரை வரிப்பணத்தை வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது சராசரியாக ஒரு அமெரிக்க குடும்பத்திற்கு ஆண்டுக்கு 1,750 டொலர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக யேல் பல்கலைக்கழக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
 

Leave a Reply