• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன் - அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியலில் தற்போதைய கதைகளத்தின்படி சோழன், நிலாவின் முயற்சியால் உயில் கிடைத்துவிட்டது.

இதனால், வீடு தங்களுடையதுதான் என கூறி வீட்டிற்குள் மீண்டும் அய்யனார் துணை குடும்பம் வந்துவிட்டனர். இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அய்யனார் துணை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை மதுமிதா. இவர் இதற்கு முன் எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை மதுமிதா திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் Casting Couch குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.

இதில், "எல்லாரும் என்னிடம் கேட்பார்கள் Casting Couch உண்மையா, அப்படிதான் இருக்குமா என்று. ஆனால், எல்லாமே அப்படி கிடையாது. Casting Couch இருக்கு இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டும். நான் நிறைய அப்படி சந்தித்து இருக்கிறேன். இண்டஸ்ட்ரியில் இருந்தால் கண்டிப்பாக அதை சந்தித்துதான் ஆகவேண்டும். உங்களுக்குள் அதை எதிர்த்து நிற்க தைரியம் வேண்டும். அய்யயோ இவன் இப்படி கேட்டுட்டானே என பயப்பட கூடாது, நான் அப்படிப்பட்டவள் கிடையாது என கூறிவிடுங்கள். அவர்களிடம் எப்போதுமே கடுமையாக இருங்கள்" என கூறியுள்ளார். 
 

Leave a Reply