• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர் - சிவராஜ் குமார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் "ஜெயிலர் 2" திரைப்படம் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பல திரைப்பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார்.

ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் இருந்ததை விட அதிக நேரம் திரையில் வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக நடிகர் சிவராஜ்குமார் கூறியிருந்தார். மேலும், ஜெயிலர் படத்தில் நடித்த பலர், இந்தப் படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பலக்கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சாரும் நானும் நன்றாகப் பழகுவோம். எஸ்.ஜே. சூர்யா அடிக்கடி நகைச்சுவையாகக் பேசுவார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இருவரும் உறவினர்கள் போல பேச ஆரம்பித்து விடுவார்கள்."

"அவர் சூப்பர் ஸ்டாராக உயர்வதை நான் மெட்ராசில் பார்த்து வளர்ந்தேன். வெற்றி பெற்றாலும், அவர் யதார்த்தமாகவே இருக்கிறார். அவர் என் தந்தையுடன் நெருங்கிய பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார். பெங்களூரு வருகைதரும் ஒவ்வொரு முறையும், எங்கள் வீட்டிற்கு வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்," என்றார்.
 

Leave a Reply