• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் திடீரென நடுவீதியில் தரையிறங்கிய விமானம் - வாகனங்களுடன் மோதி விபத்து

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுவீதியில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடுவீதியில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply