• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெரும் வரவேற்பை பெறும் வித் லவ்... முதல் 3 நாட்கள் கலெக்ஷன்

இலங்கை

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.

காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ் ஃபேமிலி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் பெரும் லாபம் ஈட்டிய நிலையில், தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் வித் லவ் திரைப்படமும் வசூலை குவித்து வருகிறது.


 

Leave a Reply