• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகில் நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

இலங்கை

காரைதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகில் உள்ள நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் நிரம்பி காணப்படுகின்றது.

அம்பாறை -கல்முனை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள  நீர் ஓடும் கால்வாய்களே இவ்வாறு குப்பை கூழங்கள்களால் நிரம்பி வழிகின்றன.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியால் செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் குறித்த நீர் கால்வாயில் பியர் ரின்கள் பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட உக்க முடியாத பல்வேறு பொருட்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இது தவிர தேங்கி நிற்கின்ற நீர் நிலையினால் டெங்கு போன்ற நோய்களும் பரவுவதற்கு காரணமாக அமைகின்றது.

மேலும் இவ்வாறான   நீர் ஓடும் கால்வாய்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்ற போதிலும்  காரைதீவு பகுதியில் இன்னும் அச்செயற்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

Leave a Reply