• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நட்பில் சந்தேகம் கூடாது- நடிகை பூஜா ஹெக்டே

சினிமா

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி', 'பீஸ்ட்', 'ரெட்ரோ' படங்களில் நடித்துள்ளார். 'கூலி' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு கலக்கியிருந்தார்.

35 வயதாகும் பூஜா ஹெக்டே தற்போது பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களின் படங்களிலும் குத்தாட்டம் போட தயார் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. "வாழ்க்கையில் நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் வரும் அற்புதமான உறவு. அந்த உறவை கொண்டாடுங்கள். பாதுகாத்து கொள்ளுங்கள். நட்பில் சந்தேகம் என்றும் கூடாது.

உண்மையான நம்பிக்கைதான் நட்பை தாங்கி பிடிக்கும். அப்படிப்பட்ட உண்மையான நட்பு கிடைத்த அத்தனை பேரும் அதிர்ஷ்டசாலிகளே'', என்றார்.
 

Leave a Reply