நீங்கள் இல்லாமல் நான் இல்லை- வாழ்த்திய ரசிகர்களால் நெகிழ்ந்து போன சிலம்பரசன்
சினிமா
நடிகர் சிலம்பரசன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரசிகர்கள், படக்குழுவினர், பொது மக்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சிலம்பரசன் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிக்கும் படக்குழு சார்பில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் சிலம்பரசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த X தள பதிவில் அவர், "எனக்குக் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துக்களாலும், அன்பான வரவேற்பாலும் நான் நெகிழ்ந்து போனேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள், மற்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அன்புடன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்."
"என் ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே என் உந்துசக்தி. உங்கள் பாசத்தாலும் ஊக்கத்தாலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்துள்ளேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை," என குறிப்பிட்டுள்ளார்.






















