• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நீண்ட இடைவெளிக்குப் பின் ரஃபா எல்லை திறப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ரஃபா எல்லை திறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரஃபா (Rafah) எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.

போரினால் சிதைந்துபோன காசாவிலிருந்து மக்கள் வெளியேறவும், வெளியேறியவர்கள் மீண்டும் தாயகம் திரும்பவும் இது ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த மே 2024-இல் இஸ்ரேல் இராணுவம் ரஃபா எல்லையைக் கைப்பற்றியது முதல், இந்தப் பாதை பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது.

தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அக்டோபர் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்த எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஆரம்பித்த நிலையில், எல்லையைத் திறப்பது ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது.

அதேவேளை எல்லை திறக்கப்பட்டாலும், இதில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
 

Leave a Reply