தலாய் லாமாவுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயரிய விருது
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று (02) இடம்பெற்ற 68ஆவது கிராமி விருது விழாவில் திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது .
மெடிடேஷன்ஸ் : த ரிப்ளெக்ஷன்ஸ் ஒப் ஹிஸ் ஹோலினஸ் த தலாய் லாமா' ( Meditations : The Reflections of His Holiness the Dalai Lama ) என்ற அல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது கருதப்படுகிறது . தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விருது குறித்து தலாய் லாமா கூறியதாவது, இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இதை நான் தனிப்பட்ட சாதனையாகப் பார்க்கவில்லை . மாறாக , நம் அனைவருக்கும் இருக்கும் உலகளாவிய பொறுப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.
அமைதி , கருணை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன் . இதனை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த விருது உதவும் என்று நான் நம்புகிறேன் , இவ்வாறு அவர் கூறினார்.






















