• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெல்ல மெல்ல குறையும் அமெரிக்க டாலரின் மதிப்பு - சீனா விடுத்த சவால்

இலங்கை

உலகளவில் சீன 'யுவானை' வலுவான சக்தியாக மாற்றப்போவதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது.

இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது.

இந்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ (Yuan) உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.

சீனா கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தில் மேற்கொண்டது.

சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழில் , "சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், 'யுவான்' நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a Reply