கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்
இலங்கை
கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருத்த நிலையில் இன்றையதினம் நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பிரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளதாக தெரிவித்து இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






















