ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் ரோல் - வெளியான சூப்பர் தகவல்
சினிமா
சூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் பல முக்கிய நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்கள். மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முன்பே தகவல் வந்தது.
மேலும் ஹிந்தி நடிகர் ஷாருக் கான் ஒரு முக்கிய ரோலில் படத்தில் தோன்ற இருக்கிறாராம்.
ஷாருக் கான் நடிக்கும் ரோல் பற்றிய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. ரஜினியின் நெருக்கமான நண்பராக தான் ஷாருக் ஜெயிலர் 2 படத்தில் தோன்றுகிறாராம்.
படத்தில் அவர் கதாபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தை pan இந்தியா அளவில் கொண்டு செல்லவே மற்ற மொழி நடிகர்களின் கெஸ்ட் ரோல் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.





















