TamilsGuide

விளம்பர உலகில் மீண்டும் அஜித் - கையில் கேம்பா எனர்ஜி உடன் வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சொந்த கார் ரேஸிங் அணியான, அஜித்குமார் ரேஸிங்' மூலம் பல்வேறு பந்தயப் போட்டிகளில் கலந்துவருகிறார் அஜித்குமார். அஜித்தின் இந்த கார் ரேஸ் வாழ்க்கைத் தொடர்பான ஆவணப்படமும் உருவாகி வருகிறது.

இதனிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் எனர்ஜி டிரிங்க் பிராண்டான 'கேம்பா எனர்ஜி' (Campa Energy), அஜித் குமாரின் 'அஜித் குமார் ரேஸிங்' அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் கேம்பா எனர்ஜி ட்ரிங்க் விளம்பரத்தில் அஜித் நடித்துள்ளது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித் குமார் மீண்டும் விளம்பர உலகில் கால் பதித்துள்ளார்.

இந்திய விளையாட்டு வீரர்களை சர்வதேச அளவில் ஊக்குவிக்கவும், "மேட்-இன்-இந்தியா" திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ரிலையன்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment