TamilsGuide

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட செயற்பாட்டுக் குழு ஸ்தாபிப்பு

“போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை” என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் பங்குபற்றுதலுடன்நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மதகுருமார்கள்,  வட மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ரவி செனவிரத்ன, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இச் செயற்பாட்டிற்கான ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் பொதுமக்கள் பாதுகாப்பு  அமைச்சரின் கவனத்திற்கு முன்வைத்தார்கள்.

இக் கூட்டத்தில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாண கடற்படைத் தளபதி, விமானப் படையின் சிரேஷ்ட அதிகாரி, பாதுகாப்பு படைகளின் அதிகாரி, பிரதிப் பிரதம செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.
 

Leave a comment

Comment