மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை சூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் கிருஷ்ண பெருமானுக்கு அதிகாலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.
ஆலயப்பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


