TamilsGuide

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள்

மட்டக்களப்பு செட்டிபாளையம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விசேட பூஜை வழிபாடுகள் இன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, விநாயகப் பெருமானுக்கு பக்தி பூர்வமாக பூஜை வழிபாடுகள் நடைபெற்றது

ஆலயப்பிரதமகுரு திருவேரகசர்மா குருக்களினால் இப்பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பூஜையின் நிறைவில் பக்தர்களுக்கு கைவிசேஷமும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
 

Leave a comment

Comment