TamilsGuide

பராசக்தி வில்லன்..டா! வீடியோ வெளியிட்ட ரவி மோகன்!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படம் உலகம் முழுவதும் கடந்த ஜனவரி 9 அன்று வெளியானது.

இப்படத்தில் ரவி மோகனின் வில்லன் கதாபாத்திரம் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்டோரும் இதில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

பராசக்தி படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.27 கோடிக்கும் மேலும் 2 நாட்களில் ரூ.51 கோடிக்கு மேலும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பராசக்தி திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கு நடிகர் ரவி மோகன் நன்றி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், "பல நல்ல உணர்வுகளை இப்போது அனுபவித்து வருகிறேன். பராசக்தி திரைப்படத்தில் 'திரு' கதாபாத்திரத்திற்கு நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் காரணமாகவே இது சாத்தியமானது.

உங்களையெல்லாம் மீண்டும், புதிய புதிய முயற்சிகளுடன் விரைவில் சந்திக்க வருகிறேன்.

2026 ஆம் ஆண்டு உங்களுக்கெல்லாம் மிகச் சிறப்பானதாக அமைய என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் தியேட்டர் சென்று படம் பார்த்த வீடியோவையும் ரவி பகிர்ந்துள்ளார். 
 

Leave a comment

Comment