TamilsGuide

சீரற்ற காலநிலை காரணமாக மூர்க்கம் கடற்கரையின் கட்டுமானங்களுக்கு பாரிய சேதம்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு காரணமாக பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் கடற்கரையில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, கொங்றீட் வீதி, சீமெந்து இருக்கைகள், நடைபாதை உள்ளிட்ட நிரந்தர கட்டுமானங்கள் அனைத்தும் கடற்கொந்தளிப்பில் அள்ளுண்டு அழிவடைந்துள்ளன.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மண் அரிப்பு ஏற்படும் பட்சத்தில் கடல் நீர் ஊர்மனைக்குள் உட்புகும் பேராபத்து உள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் அயலில் உள்ள ஒரு கிராமமே பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சம்பவ இடத்திற்கு வருகைதந்து நிலமைகளை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள பொதிப்பதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

நகரசபை ஊழியர்கள் மூலம் அபாய நிலையில் காணப்பட்ட வீதியில் பிரவேசிக்காத வகையில் கற்களை கொண்டு தடை ஏற்படுத்தப்பட்டது.

அத்துடன் சிறுவர் பூங்காவிற்குள் முற்றாக கடல் நீர் உட்புகும் நிலையில் அதற்கான மின்சார இணைப்பினை மின்சார சபை தரப்பினர்கள் மூலம் துண்டிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
 

Leave a comment

Comment