TamilsGuide

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 டிசம்பர் மாதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தகவலின்படி, 2025 நவம்பரில் 6.034 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட அந்த எண்ணிக்கை 2025 டிசம்பர் 6.825 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இது 13.1% அதிகரிப்பாகும்.

இதனிடையே, டிசம்பர் மாத இறுதியில் மொத்த வெளிநாட்டு நாணய இருப்பு 6.734 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

அது 2025 நவம்பர் மாத இறுதியில் 5.944 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.

இது 13.3% அதிகரிப்பாகும்.

இதில் சீன மக்கள் வங்கி (PBOC) இடமாற்று ஏற்பாட்டிலிருந்து பெறப்பட்ட சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான வருமானமும் அடங்கும்.

இது பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
 

Leave a comment

Comment