TamilsGuide

கனடாவில் வீடொன்றின் மீது இரண்டாவது தடவயைாக துப்பாக்கிச் சூடு

கனடாவில் வீடொன்றின் மீது இரண்டாவது தடவையாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

யார்க் பிராந்தியத்தின் ரிச்ச்மண்ட் ஹிலில் ஒரு வீட்டின் மீத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த வீட்டின் மீத இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதல் சம்பவத்தில், யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லை, ஆனால் சொத்து சேதமடைந்துள்ளன.

அந்த வீட்டில் அந்த நேரத்தில் எவரும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடு கடந்த நவம்பர் மாதத்திலும் குறிவைக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சாம்பல் நிற ஹோண்டா SUV மற்றும் குறைந்தது இரு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 
 

Leave a comment

Comment