TamilsGuide

ஜனநாயகன் படத்தில் விஜய்யுடன் நடிக்க மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. 

மலையாளத்தில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மமிதா பைஜூ. இவர் ரெபல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து வெளிவந்த Dude படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அடுத்ததாக மமிதா பைஜூ நடிப்பில் தமிழில் வெளிவரவிருக்கும் படம்தான் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக மமிதா நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வெளிவந்தபின் மமிதாவுக்கு பாராட்டுக்கள் குவியும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அவர் ஆக்ஷன் காட்சிகளில் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க மமிதா பைஜூ ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். 
 

Leave a comment

Comment