TamilsGuide

ஜனநாயகனைத் தொடர்ந்து சிக்கலில் சிக்கிய பராசக்தி - சோகத்தில் ரசிகர்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றநிலையில், ஜன.5 படத்தின் டிரெய்லர் வெளியானது. தற்போதுவரை இந்த டிரெய்லர் யூடியூபில் ஐந்து கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. படம் பொங்கலை முன்னிட்டு ஜன.10ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.

படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இப்படமும் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என கூறப்படுகிறது. ஏற்கனவே தணிக்கை சான்றிதழ் இழுபறியால் ஜனநாயகன் 9ஆம் தேதி வெளியாகுமா என குழப்பம் நிலவிவரும் நிலையில், தற்போது பராசக்தி படமும் சிக்கலில் உள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment