எம் ஜி ஆர் கூட நடித்தவர்களில் எல்லோரையும் விட பொருத்தமாய் அமைந்த நடிகை சரோஜா தேவி மட்டுமே. நாடோடி மன்னன் துவங்கி அரசகட்டளை வரை.
சிவாஜியின் மணியான அத்தனை படங்களிலும் 'பாக பிரிவினை ' துவங்கி ஆலயமணி ,புதிய பறவை என்று எத்தனை படங்கள். ஜெமினி கணேசன் படங்கள் 'கல்யாண பரிசு ' முதல் ' பணமா பாசமா ' வரை.ஜெமினியை 'அண்ணா' என அழைப்பார் சரோஜா தேவி.
இப்படி ஒரு அடித்தளம் சரோஜா தேவி தவிர பிற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏனைய நடிகைகளின் பொறாமைக்கும் உள்ளானவர்.
சாவித்திரி பல சிக்கல்களை தன் வாழ்வில் சந்தித்து சிரமத்திற்கு உள்ளாகி தன் முடிவுகள் பலவற்றினால் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டதால் அவரை சரோஜா தேவி ஓவர் டேக் செய்தார்.
சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரும் தமிழ் திரையின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள். நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும் தங்கள் நளினமான பாவனைகளால்,நடிப்பால் பத்மினியையே மிரட்டியவர்கள்.
அறுபதுகளை தமிழ் திரையுலகில் முழுமையாக ஆக்கிரமித்தவர் சரோஜா தேவி. அதற்கு பின்னர் இவர் அளவுக்கு வேறு யாருக்கும், எந்த நடிகைக்கும் மேடை கிடைத்ததில்லை. அபிநய சரஸ்வதி, கன்னடத்து கிளி.
இவருக்காக ஐம்பதுகளில் திரைப்பட சான்ஸ் தேடிய பத்மா சுப்ரமணியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். அதனால் தான்
நமக்கு ஒரு அபிநய சரஸ்வதி கிடைத்தார்.
Prashantha Kumar


