TamilsGuide

மட்டக்களப்பில் கொட்டி தீர்க்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் தாழ்நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது.

இதனிடையில் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட திருப்பழுகாமம் கிராமத்தில் வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தவிசாளர் விமலநாதன் மதிமேனன், வருகை வந்ததுடன், பிரதேச சபை JCB இயந்திரம் மூலம் வெள்ள நீரை வழிந்தோட செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment