"புதியபூமி": ஜேயார்மூவிஸ் தயாரிப்பில் சாணக்யா இயக்கிய மக்கள் திலகத்தின் 98 வது படம். குகநாதனின் கதைக்கு வசனம் எழுதும் வாய்ப்பை திமுகவின் S.S. தென்னரசுக்கு வழங்கினார் வள்ளல்
நம்பியார் கொள்ளைக்காரன் காங்கேயனாக வந்து மிரட்டுவார். டாக்டர் கதிரவனின் சிகிச்சைக்குப்பின் நலம் பெற்ற காங்கேயன், கதிரவன் தன்னை பிடிக்க அலையும் போலீஸ் அதிகாரியின் மகன் என்று தெரிந்ததும் கதிரவனை கொல்ல நினைக்கிறான்.
மக்கள் திலகம் கதிரவனாக தோன்றி தென்காசி சகோதரர்களை மட்டுமல்லாமல் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கதிரவனையும் காப்பாற்றி வெற்றி பெறச்செய்கிறார். படத்தின்
4 வது வார வால் போஸ்டரில் தென்காசி இடைத்தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றதையடுத்து 'வெற்றி வெற்றி கதிரவனுக்கு வெற்றி' என்ற வாசகத்தை பயன்படுத்தினார்கள்.
"புதியபூமி"யின் வெற்றியையும், திமுகவின் வெற்றியையும் குறித்து அந்த போஸ்டர் ஒட்டப்பட்டது.
திரையிட்ட அத்தனை ஊர்களிலும் நான்கு வாரத்தை பூர்த்தி செய்து 5வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது "புதியபூமி". தூத்துக்குடியிலும் 30 நாட்கள் வரை ஓடியது. நல்ல மகசூலும் கிடைத்தது.
திரு RMVஅவர்கள் தென்காசி PKV சங்கரன் ஆறுமுகம் துணையுடன் கனகசபை செட்டியாரின் ஆதரவையும் சேர்த்து தயாரித்த "தெய்வத்தாய்" மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 நாட்களை கடந்தது.
அடுத்த தயாரிப்புக்கு PKV சகோதரர்கள் 'ஜேயார் மூவிஸ்' என்ற
கம்பெனியை உருவாக்கி உலக உரிமையை பெற்ற கனகசபை செட்டியாருடன் சேர்ந்து தயாரித்த படம்தான் "புதிய பூமி". கம்பெனியின் பெயரே 'ஜானகி ராமச்சந்திரன்' என்பதை சுருக்கி 'ஜேயார் மூவிஸ்' என்ற பெயர் வைத்தனர். "எங்க வீட்டுப் பிள்ளை" என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கிய சாணக்யா படத்தை இயக்கியதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தை நன்கு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார்.
படம் நார்மலான வெற்றியை பெற்றது.
சென்னையில் 50 நாட்களும், தமிழகத்தின் மற்ற ஊர்களில் அதிகபட்சமாக 70 நாட்கள் வரை ஓடியது. பெங்களூரில் "ஊட்டி வரை உறவு" "விளையாட்டு பிள்ளை" "குருதட்சணை" "எங்க மாமா" "நிறைகுடம்" போன்ற அய்யனின் படங்களை தாண்டி ஓடியது.
தூத்துக்குடியில் நல்ல வசூலை பெற்று 30 நாட்கள் வரை காரனேஷனில் ஓடியது.
டாக்டராக வரும் மக்கள் திலகம் அந்த கிராம மக்களின் அறியாமையை அகற்ற அதிர்ச்சி வைத்தியம் பார்க்கிறார். அறியாமையில் ஊறி திளைத்த கதாநாயகியை மீட்டு அவரை மணந்து ஊரையே அச்சுறுத்திக் கொண்டிருந்த கொள்ளையன் காங்கேயனிடமிருந்து அப்பாவி கிராம மக்களை மீட்டு அவர்கள் வாழ்க்கைக்கு புத்துயிர் ஊட்டி "புதியபூமி"யை உருவாக்குகிறார்.
மக்கள் திலகத்தின் அநாயசமான நடிப்பு படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. அவரின் ஸ்டைலும் ஆட்டுக்குட்டியை தோளில் சுமக்கும் போஸும் படத்துக்கு நல்ல விளம்பரத்தை கொடுத்தது. பாடல்கள் அனைத்துமே அட்டகாசம். அதிலும் 'விழியே விழியே' மற்றும் 'சின்னவளை முகம் சிவந்தவளை' பாடலுக்கு ஜெயா ஆடும் கடினமான மூவ்மென்ட் பிரமாதமாக இருக்கும். 'நான் உங்க வீட்டு பிள்ளை' என்ற பூவை செங்குட்டுவனின் பாடல் தலைவரின் தனிப்பாடல் வரிசையில் என்றுமே எவர்கிரீன் வகையை சேர்ந்தது. மேலும் 'நெத்தியிலே பொட்டு வச்சேன்' மற்றும் 'நான்தாண்டி காத்தி' பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. M.S.V. தனது பங்கை சிறப்புடன் செய்திருந்தார்.
'அங்கே வேடன் வலையை விரித்து விட்டான் நீ இங்கே வெண்புறாவை பறக்க விடாதே' போன்ற அற்புதமான வசனங்கள் பளிச்சென்று இருக்கும். படத்தில் செலவு என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். செலவே இல்லாமல் எடுத்த "புதியபூமி" தென்காசி சகோதரர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் 'பிரம்மசாரி' என்ற இந்திப்படத்தை வாங்கி தலைவரை நடிக்க வைக்க முயன்றனர்.
ஆனால் மக்கள் திலகமோ மிகவும் பிஸியாக இருந்ததால் கொஞ்சம் கால தாமதமாகும் என்று தெரிந்தவுடன் மாற்று அணிக்கு விரைவாக சென்று வசமாக மாட்டிக்கொண்டு வெள்ளி விழா படமான "பிரம்மசாரி"யை தமிழில் தோல்வி படமாக்கினர். ஆனால் அவர்களுடன் இருந்த கனகசபை செட்டியார் அதற்கு சம்மதிக்காமல் அவர் தனியாக 'ஜெயந்தி பிலிம்ஸ்' என்று கம்பெனியை உருவாக்கி 'ஜிக்ரி தோஸ்த்' என்ற சுமாரான வெற்றி பெற்ற இந்திப்படத்தை தமிழில் "மாட்டுக்கார வேலனா"க்கி தனது பங்குதாரரின் "மாமா" படத்தோடு மோதி வெள்ளி விழா கண்டு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது காலச்சுவட்டில் பதிந்த அடையாளம்.
நன்றி.. நடிகப் பேரரசர்..


