1968அல்லது 1969:ஆம் ஆண்டில் ராணி சம்யுக்தா படத்தின் போஸ்ட்டரை சிந்தாதிரி பேட்டை மார்க்கெட் சுவரில் பார்த்தேன்.
மிக அகன்ற சிம்மமாசனத்தில் பிரித்வி ராஜன் வீற்றிருந்தார்.
பிளாசா அல்லது பாரகன் திரை அரங்கில் படம் வெளியாகி இருந்தது.
எட்டு வயது தான் அப்போது எனக்கு.
இருந்தாலும் பிரித்வி ராஜன், சம்யுக்தா காதலை அறிந்திருந்தேன்.
அலை ஓசை தொடரில் சீதா லலிதாவுக்கு சொன்ன பல சரித்திர காதலர் கதைகளில்
பிரித்வி ராஜன் சம்யுக்தா கதையும் ஒன்று.
ஆனால் போஸ்ட்டரை பார்த்ததும் எவ்வளவு ஆவல் படத்தை பார்த்ததும் உண்டானதோ அதே அளவு கோபமும் வந்தது.
பிரித்விராஜன் பெயரை போடாமல் என்னடா உங்களுக்கு ராணி சம்யுக்தாவின் பெயர் வேண்டிக்கிடக்கிறது என்று கோபம்.
வீட்டுக்கு போய் என் அன்னையிடம் விளக்கம் கேட்டால் சித்தூர் ராணி பத்மினி என்று தான் இன்னொரு படத்திற்கு பெயர் வைத்தார்கள்.
ஏன் இப்படி கதாநாயகிகள் பெயரை படங்களுக்கு வைக்கிறார்கள் என்று எனக்கும் தெரிய வில்லை என்று சொல்லி விட்டார்.
படத்திற்கும் அழைத்து போக மறுத்து விட்டார்.
காரணம்? படத்தில் பிரித்வி ராஜன் இறந்து போகிறார்.
எனவே முடியாது முடியாது..
படத்திற்கு அழைத்து போக முடியாது என்று அடமாக இருந்து விட்டார்.
MGR ஒரு படத்தில் மரணம் என்றால் அந்த படம் ஓடாது. மக்கள், குறிப்பாக தாய் குலம் அரங்கிற்கே வராது.
விதி விலக்கு மதுரை வீரன்.
அது ஒரு சீரியஸ், unbreakable செண்டிமெண்ட்.
ஆனால் அதன் பிறகு கொஞ்சம் விரிவாக பிரித்வி ராஜன் வரலாறை எட்டாம் வகுப்பு துவங்கி வரலாறு முதுகலை பட்ட படிப்பு வரை தொடர்ந்து படித்து கொண்டே இருந்தேன்.
ஆனால் விரிவாக எந்த வகுப்பிலும் விவரங்கள் சொல்லப்படவில்லை.
அமர் சித்ரா காமிக்ஸ் புத்தகத்தில் கூட கொஞ்சம் விரிவாக இருந்தது.
வரலாற்று பாடங்களிலோ ஏமாற்றம் தான் கிடைத்தது.
கனோஜ் ராஜ்ஜியத்தின் அரசன் ஜெய சந்திரன்.
பிரித்வி ராஜனின் ராஜ்யத்தின் பெயர் நினைவில் இல்லை.
இருவருக்கும் ஏதோ பகை.
ஜெயசந்திரன் மகள் பேரழகி.
சம்யுக்தா அவள் பெயர்.
தந்தைக்கும் பிரித்வி ராஜனுக்கும் ஏதோ பகை என்று சம்யுவுக்கு தெரியும்.
பிரித்வி ராஜன் அழகன், பெரும் வீரன் என்பதும் அவளுக்கு தெரியும்.
தகப்பனாவது, முன் பகையாவது என்று சற்றும் தடுமாறாமல், காணாமலே பிரித்வி மீது காதல் கொள்கிறாள் சம்யு.
ஜெயசந்திரன் சம்யுவுக்கு அந்த kaala🙏வழக்கப்படி சுயம் வரம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறான்.
YES. பிரித்விக்கு அழைப்பு இல்லை.
அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
பிருத்வியை அவமானப்படுத்த அவனை போல சிலை ஒன்றை செய்து வாயிற் காப்போன் உடை அணிவித்து தன் அரண்மனை வாயிலில் நிறுத்தி விடுகிறான் ஜெய சந்திரன்.
சம்யுவுக்கு இது ரொம்ப சாதகமாக போய் விடுகிறது.
சுயம்வர மண்டபத்தில் ஆசையோடு காத்திருந்த 56 தேசத்து அரசர்களுக்கும் அல்வா கொடுத்து விட்டு வாயிலில் நிற்க வைக்கப்பட்டு இருந்த பிருத்வியின் சிலைக்கு சுயம்வர மாலையை போடுகிறாள் சம்யு.
சிலர் சொல்கிறார்கள், சிலையை போல அங்கே ஒரு காவலன் உடையில் பிருத்வியே நின்றிருந்தான்.
சம்யுவை அப்படியே தூக்கி கொண்டு எதிர்த்தவர்களை வெட்டி வீழ்த்தி பிருத்வி ராஜன் தன் ராஜ்ஜியத்திற்கு சம்யுவை கூட்டி சென்று விட்டான் என்று.
இன்னும் சிலர் இல்லை இல்லை.
தன் சிலைக்கு சம்யு மாலை அணிவித்து உடன் அவளது காதலை அறிந்து மாறு வேடத்தில் வந்திருந்த பிருத்வி எதிர்ப்புகளை மீறி சம்யுவை தூக்கி சென்றான் என்கிறார்கள்.
எது எப்படியோ, பெருத்த அவமானம் ஜெய சந்திரனுக்கு.
இந்த நேரத்தில் கோரி முகமது நுழைகிறான்.
1191 ஆம் ஆண்டு தாரெயின் என்ற இடத்தில் முதல் போர்.
கனோஜ் ராஜ்ஜியத்தின் அரசன் ஜெயசந்திரனை தவிர்த்து ஏனைய மன்னர்கள் பிருத்வியின் தலைமையில் அணி திரண்டு நிற்க..
பெரும் வெற்றி பிருத்விக்கு.
படு காயமுற்று பின் வாங்கி இடுகிறான் முகமது கோரி.
1192 இல் மீண்டும் அதே தாரெயின் களத்தில் போர்.
இம்முறை நமக்கே உரித்தான சாபக்கேடு ஒன்று இருக்கிறதே..
உடன் பிறந்தே கொல்லும் வியாதி.
அது பற்றிக்கொள்கிறது பிருத்வியை.
மாமனார் ஜெய சந்திரன் கோரிமுகமது உடன் சேர்ந்து கொள்ள,
கடுமையான போரில் பிருத்வி கொல்ல படுகிறான்.
1193 ஆம் அதே தாரெயின் களத்தில் தனித்து நின்ற ஜெய சந்திரணை கோரி முகமது எளிதாக வெற்றி கொள்கிறான்.
ஜெய சந்திரணை கொன்றும் போடுகிறான்.
வரலாற்று ஆசிரியர்கள் இன்னொரு முக்கிய செய்தியை சொல்கிறார்கள்.
1192 ஆம் ஆண்டில் சோழ சக்கரவர்த்தி இரண்டாம் ராஜ ராஜன் அல்லது இரண்டாம் ராஜேந்திரன்.. எனக்கு நினைவில்லை.
இருவரில் ஒருவர் அங்கே பெரும் படையுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் மட்டும் கோரி முகமதுவை நோக்கி சோழ படையை திருப்பி இருந்தால் இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு அந்நிய படையெடுப்பு நம் மீது இருந்திருக்காது என்று..
ராணி சம்யுக்தா படத்தை பற்றி ஒரே ஒரு செய்தி.
குமுதம் விமர்சனத்தில் தங்க வேலுவின் படத்தை மட்டுமே போட்டு விமர்சனம் செய்திருந்தார்கள்.
அந்த படம் என்னிடம் இருக்கிறது.
விமர்சனம் வெளியான பக்கம் தான் இல்லை.
நான் ஓய்வு பெறுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்வி ராஜ் என்கிற பெயரில் சிங்க பெருமா கோயிலில் இருந்து ஒரு இளைஞன் பணிக்கு வந்தார்.
அன்றில் இருந்து இன்று வரை என்னுயிர் தோழன் அந்த பிரித்வி.
என் அக்காவின் இரு பேத்திகளில் ஒருத்தியின் பெயர் சம்யு. சம்யுக்தா.
சாய் சம்யுக்தா.
இங்கே நான் பதிவிட்டுள்ள பேசும் படத்தின் அட்டை படம் என்னிடம் இருக்கிறது.
Mgr அழகன்.பிருத்வி
பத்மினி அழகி. சம்யுக்தா.
தங்கவேலு யார்? தெரிஞ்ச வாடு செப்பேண்டி.
நம்பியார் கோரி முகமதுவா? ஜெய சந்திரனா?
தெய்வமே! தீ குழியில் இறங்கி விட்டேன்.
காப்பாற்று. 🙏🙏
Vino Mohan


