அசோகன் மீது எம்.ஜி.ஆர் காட்டிய அன்பின் அடையாளம்
சினிமா
எம்.ஜி.ஆர் அவர்களுடன் பல படங் களில் நடித்தவர் எஸ்.ஏ.அசோகன். ஏவி.எம்.சரவணன் சாரிடம் எனது குருநாதர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களை அறிமுகப்படுத்தியவரே அசோகன் தான். ‘அன்பே வா’ படத்தில் சரோஜா தேவிக்கு முறைப் பையனாக நடித்தார் அசோகன். அந்தப் படத்தின் ஷூட்டிங் நாட்களில் பெரும்பாலும் மதிய உணவு எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்துதான் வரும். அவரே சாப்பாட்டை எல்லோருக்கும் பரிமாறுவர். அவரது கையால் பரிமாறி உணவருந்தும் நல்வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அது ஒரு பொற்காலம்.
‘‘நம்ம அசோகன் நேரங்கெட்ட நேரத் துல சாப்பிட வருவாரு. அவருக்கு சாப்பாடு எடுத்து வைங்க’’ என்பார். அது அசோகன் மீது எம்.ஜி.ஆர் காட்டிய அன்பின் அடையாளம். எம்.ஜி.ஆரின் விருந்தோம்பல் சரித்திரத்தில் இடம் பெற்றது.
- இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
























